வஃக்பு மசோதா மோசடியானது; அரசியல் சாசனத்திற்கு எதிரானது: திருச்சி சிவா எம்.பி. பேச்சு

18 hours ago 2

சென்னை: மாநிலங்களவையில் வஃக்பு மசோதா மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசினார். அப்போது; வஃக்பு மசோதா மோசடியானது; அரசியல் சாசனத்திற்கு எதிரானது. வக்ஃபு திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகவே வக்ஃபு திருத்த மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம். வஃக்பு மசோதா நிறைவேறிய நாள் ஒரு வருத்தமான நாள். நாட்டின் முன்னேற்றத்துக்கு இஸ்லாமியர்கள் ஏராளமான பங்களிப்பைச் செய்துள்ளனர்.

ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்பதை ஒன்றிய அரசு வலியுறுத்துகிறது. வக்ஃபு திருத்தச் சட்ட மசோதா நிர்வாகத்தை மேம்படுத்த எனக் கூறுவது உண்மைக்கு புறம்பானது. வக்ஃபு நிர்வாகத்தையே கைப்பற்றுவதற்குதான் திருத்த மசோதா கொண்டு வரப்படுகிறது. வக்ஃபு மசோதா அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; மதச்சார்பின்மைக்கு எதிரானது. பல மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவில் ஒன்றிய அரசு நினைப்பது சாத்தியம் இல்லை.

சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் கூட 5 கி.மீ. தூரத்தில் உள்ள உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்படக் கூடும். அனைவருக்குமான வளர்ச்சி என்று கூறுகிறது; முஸ்லிம்களுக்கு மட்டும் வேறு கொள்கையை பாஜக அரசு கடைப்பிடிக்கிறது. முஸ்லிம்களை ஓரம் கட்டுவது, பொது நீரோட்டத்தில் இருந்து விலக்குவதுதான் ஆளும்கட்சியின் கொள்கை. அரசின் செயலால் முஸ்லிம்கள் அந்நியப்படுத்தப்படுகின்றனர்; பாதுகாப்பு இல்லாதவர்களாக உணர்கின்றனர். மசோதாக்களை ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பதால் எந்தப் பயனும் இல்லை.

வக்ஃபு மசோதாவை ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் நடவடிக்கையே அதற்கு எடுத்துக்காட்டு. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் வக்ஃபு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் அளித்த திருத்தங்கள் எதுவுமே ஏற்கப்படவில்லை என்று கூறினார்.

The post வஃக்பு மசோதா மோசடியானது; அரசியல் சாசனத்திற்கு எதிரானது: திருச்சி சிவா எம்.பி. பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article