'லெவன் படம்' : டி.இமான் இசையில் வெளியான ஆங்கில பாடல்

6 months ago 37

சென்னை,

இயக்குனர் சுந்தர் சி-யிடம் 'கலகலப்பு 2', 'வந்தா ராஜாவாதான் வருவேன்', 'ஆக்சன்' உள்ளிட்ட படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர் லோகேஷ் அஜ்ல்ஸ். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான 'லெவன்' திரைப்படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர்.

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லெவன்' எனும் திரைப்படத்தில் நவீன் சந்திர, ரியா ஹரி, ஷசாங்க், ரவி வர்மா, கீர்த்தி தாம ராஜு, அபிராமி, 'ஆடுகளம்' நரேன், திலீபன், ரித்விகா, அர்ஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் 'தி டெவில் இஸ் வெயிட்டிங்' எனும் ஆங்கில பாடல் இடம்பெற்றுள்ளது. இதை இயக்குனர் லோகேஷ் அஜ்ல்ஸ் எழுதியுள்ளார். டி.இமான் இசையில் ஸ்ருதிஹாசன் இந்தப் பாடலை பாடியுள்ளார். இதை நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் வெளியிட்டார்.

இயக்குனர் லோகேஷ் அஜ்ல்ஸ் இப்பாடல் குறித்து கூறும்போது, "படத்தில் இந்த ஆங்கில பாடல் முக்கியமான இடத்தில் வருகிறது. கதையை நகர்த்தும் விதமாகத்தான் இருக்கும். காட்சிக்கு அவசியம் என்பதால் ஆங்கில பாடலை வைத்துள்ளோம். டி. இமானின் இசையும் ஸ்ருதி ஹாசனின் குரல் வளமும் பாடலுக்கு மிகப்பெரிய பலமாகும். நாயகன் மற்றும் வில்லனைக் குறித்த பாடலாக இது அமைந்திருக்கிறது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெறும்" என்று கூறியுள்ளார்.

Read Entire Article