'லிப்ட்' பட இயக்குனருடன் இணையும் ஹரிஷ் கல்யாண்!

3 months ago 26

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் வெளியான படம் 'லிப்ட்'. இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற கவின், நடிகை அமிர்தா ஐயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்துள்ளார். இந்த படம் திரையரங்கில் வெளியாகவில்லை, நேரடியாக ஹாட்ஸ்டார் ஓ.டி.டி.யில் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில், இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஹரிஷ் கல்யாண், இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளிவந்த 'லப்பர் பந்து' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும், பலதரப்பட்ட மக்களால் இத்திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கும் புதிய படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் பிரபல மலையாள நடிகரான செம்பன் வினோத் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஹரிஷ் கல்யாண் இதுவரை நடித்ததிலேயே மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக உள்ள திரைப்படமாகும். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.

Read Entire Article