லால்குடியில் ஜல்லிக்கட்டு 600 காளைகளுடன் 400 வீரர்கள் மல்லுக்கட்டு

5 hours ago 2

லால்குடி: திருச்சி மாவட்டம் லால்குடி தெற்கு வீதி மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதையொட்டி திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

இறுதியாக 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை லால்குடி ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், மிக்சி, மின்விசிறி, எவர்சில்வர் பாத்திரம் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது.

மணப்பாறை திருச்சி மாவட்டம் மணப்பாறை பெஸ்டோ நகர் வேலாயி அம்மன் திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி இன்று நடந்தது. இதில் திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க ஒரு குழுவில் 10 பேர் வீதம் 13 குழுக்களாக வீரர்கள் களம் இறங்கினர். ஒரு காளையை அடக்க 25 நிமிடம் ஒதுக்கப்பட்டது. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

The post லால்குடியில் ஜல்லிக்கட்டு 600 காளைகளுடன் 400 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.

Read Entire Article