பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்கள் விடுவிப்பு: வாகா எல்லை வழியாக வந்தனர்

4 hours ago 3

புதுடெல்லி: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டதால், அவர்கள் வாகா எல்லை வழியாக இந்தியா திரும்பினர். பாகிஸ்தான் நாட்டின் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 22 இந்திய மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இந்தியா – பாகிஸ்தான் வாகா எல்லையின் வழியாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். முன்னதாக பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள், தனியார் அறக்கட்டளையால் இயக்கப்படும் சிறப்பு பேருந்தில் கராச்சியில் இருந்து லாகூருக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் அவர்கள் வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தனியார் அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கூறினார். இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களும் கடலில் மீன்பிடிக்கும்போது கடல் எல்லைகளைக் கடந்து மீன் பிடிப்பதால் அந்தந்த நாடுகளின் கடற்படையால் கைது ெசய்யப்படுகின்றனர்.

பின்னர் நீதிமன்ற உத்தரவின் படி விடுவிக்கப்படுகின்றனர். கடந்த ஜனவரி 1ம் தேதி இரு நாடுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்ட கைதிகளின் பட்டியலின்படி, பாகிஸ்தானில் 217 மீனவர்கள் உட்பட 266 இந்திய கைதிகள் உள்ளனர். அதே நேரத்தில், இந்தியா பகிர்ந்து கொண்ட பட்டியலின்படி, இந்திய சிறைகளில் மொத்தம் 462 பாகிஸ்தான் கைதிகள் உள்ளனர்; இவர்களில் 81 மீனவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னதாக கடந்தாண்டு டிசம்பரில் மக்களவையில் வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலில், ‘கடந்த 2014 முதல் இதுவரை மொத்தம் 2,639 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானிலிருந்து திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

The post பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்கள் விடுவிப்பு: வாகா எல்லை வழியாக வந்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article