'லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்: தி வார் ஆப் தி ரோஹிரிம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

3 months ago 22

சென்னை,

'லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்: தி வார் ஆப் தி ரோஹிரிம்' என்பது அனிமேஷன் கற்பனை கதையாகும். இந்த கதை ஜெப்ரி அடிஸ், வில் மேத்யூஸ் மற்றும் போப் கிட்டின்ஸ் ஆகியோரின் திரைக்கதையிலிருந்து இயக்குனர் கென்ஜி கமியாமா ஜப்பானிய அனிமேஷன் பாணியில் இந்த அனிமேஷன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

வார்னர் பிரதர்ஸ் அனிமேஷன், நியூ லைன் சினிமா மற்றும் சோலா என்டர்டெயின்மென்ட் ஆகியவை இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. இப்படம் அமேசான் பிரைமின் 'தி ரிங்க்ஸ் ஆப் பவர்' படத்தை தழுவி வேறொரு புதிய தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்திய நிகழ்ச்சியில் இப்படத்தின் 20 நிமிட முன்னோட்ட காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சி அங்கிருந்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Before The War of the Ring, there was The War of The Rohirrim. #LOTR: The War of The Rohirrim - only in theaters December 13. pic.twitter.com/0Rdw6sDv9i

— Warner Bros. Pictures (@wbpictures) October 18, 2024
Read Entire Article