தர்மபுரி, ஜன. 25: நல்லம்பள்ளி தாசில்தார் சிவகுமார் தலைமையிலான அதிகாரிகள், காணிகாரஹள்ளி – தொப்பூர் சாலையில் உம்மியம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தும்படி தெரிவித்தனர். அதிகாரிகளை கண்டதும் லாரியை நிறுத்திய டிரைவர் கீழே இறங்கி தப்பியோடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் லாரியை சோதனையிட்ட போது, அதில் 6 யூனிட் கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கற்களுடன் லாரியை தொப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
The post லாரியில் கடத்திய 6 யூனிட் கற்கள் பறிமுதல் appeared first on Dinakaran.