லாரி மீது வேன் மோதி விபத்து: 4 போலீசார் உள்பட 5 பேர் பலி

3 hours ago 2

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று போலீஸ் குழுவினர் பிரோசாபாத்தில் இருந்து புலந்த்ஷார் பகுதிக்கு விசாரணை கைதியை அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

அலிகார் மாவட்டத்தில் போலீசார் சென்ற வேன், லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. நின்றுகொண்டிருந்த லாரியுடன் வேம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் போலீஸ் வேனில் பயணம் செய்த 4 போலீசார், விசாரணை கைதி என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். ஒரு போலீஸ்காரர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Read Entire Article