லாரி கவிழ்ந்ததால் டிராபிக் ஜாம்

8 hours ago 2

 

கொடைக்கானல், ஏப். 28:திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானலுக்கு பலசரக்கு லோடு ஏற்றி கொண்டு நேற்று காலை ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. வத்தலக்குண்டு- கொடைக்கானல் மலைச்சாலையில் வனத்து சின்னப்பர் குருசடி அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதனால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகவலறிந்து வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்தி சுமார் 1 மணிநேரத்திற்கு பின் போக்குவரத்தை சீரமைத்தனர். அதிர்ஷ்டவசமாக லாரி பிற வாகனங்கள் மீது மோதாமல் இருந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

The post லாரி கவிழ்ந்ததால் டிராபிக் ஜாம் appeared first on Dinakaran.

Read Entire Article