கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மே 6-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக நீலகிரி மாவட்டம் கோடநாடு ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவத்தை பொறுத்தவரையில் காவல்துறையினர் சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்த பிறகு வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
அதனடிப்படையில், சமீபத்தில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இதனை தொடர்ந்து வழக்கின் மிக முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சயானிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 6-ம் தேதி ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் appeared first on Dinakaran.