திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கலப்பட விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என டிஜிபி துவரகா திருமலை ராவ் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று திருப்பதி திருமலைக்கு வந்த ஆந்திர மாநில டிஜிபி துவாரகா திருமலை ராவ், காவல்துறை மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் டிஜிபி துவாரகா திருமலை ராவ் கூறியதாவது: லட்டு பிரசாதத்தில் நெய் கலப்படம் குறித்து தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீவிரத்தை கொண்டு சிறப்பு விசாரணை குழு ஐஜி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் இந்த விசாரணைக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு வரும் வரை தற்காலிகமாக சிறப்பு விசாரணை குழுவின் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post லட்டு கலப்பட விசாரணை தற்காலிக நிறுத்தம்: ஆந்திரா டிஜிபி தகவல் appeared first on Dinakaran.