உயர் நீதிமன்ற மத்தியஸ்த மையத்தில் வழக்கு தொடருபவர்களுக்கான நீதிமன்ற கட்டணத்தை குறைக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை

3 days ago 6

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் எஸ்.அறிவழகன் மற்றும் நிர்வாகிகள், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமிடம் கொடுத்த கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: பெரிய நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உயர் நீதிமன்றத்தில் மத்தியஸ்த மையம் உள்ளது. மாற்றுமுறை தீர்வாக செயல்படுத்தப்படும் இந்த மத்தியஸ்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஒரு குழு உள்ளது.

இந்த குழுவில் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். மத்தியஸ்தம் செய்வதற்கான நீதிமன்ற கட்டணம் டெல்லி, கொல்கத்தா, மும்பை உயர் நீதிமன்றங்களைவிட பல மடங்கு உள்ளது. இதனால், பெரும்பாலான நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகாமல் மற்ற உயர் நீதிமன்றங்களை நாட தொடங்கியுள்ளன. இதனால், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச மத்தியஸ்த மையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post உயர் நீதிமன்ற மத்தியஸ்த மையத்தில் வழக்கு தொடருபவர்களுக்கான நீதிமன்ற கட்டணத்தை குறைக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article