'லக்கி பாஸ்கர் என்னுடைய கதை'- பாலிவுட் இயக்குனர் குற்றச்சாட்டு

4 months ago 10

சென்னை,

வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான படம் "லக்கி பாஸ்கர்". இந்தப் படத்தை நாக வம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார்.

ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனர் ஹன்சன் மெக்தா, தனது இயக்கத்தில் கடந்த 1992-ம் ஆண்டு வெளியான ஸ்கேம் தொடரின் கதைதான் லக்கி பாஸ்கர் என குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

'நான் இயக்கி இருந்த ஸ்கேம் வெப் தொடரின் பெரும் பகுதியை தயாரிப்பாளர் நாக வம்சி லக்கி பாஸ்கர் படத்தில் பயன்படுத்தியுள்ளர். ஸ்கேம் போன்ற ஒரு இந்தி தொடரை பிற மொழிகளில் பார்ப்பதற்கு சந்தோஷமாகதான் உள்ளது' என்றார் 

லக்கி பாஸ்கர் படத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கும் துல்கர் சல்மான், குடும்பத்தின் வறுமைக்காரணமாக பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டு இறுதியில் கார், வீடு என பெரிய செல்வந்தராக மாறியிருப்பார்.

அதேபோல், கடந்த 1992-ம் ஆண்டு பங்குச் சந்தை ஊழலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருந்த வெப் தொடர் ஸ்கேம். இதனை ஹன்சன் மேத்தா இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article