ரோம் மருத்துவமனையில் வாந்தி, இருமலால் போப் பாதிப்பு

1 day ago 2

ரோம்: கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ்(88) கடந்த இரண்டு வாரங்களாக ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு அவரது உடல் ஒத்துழைப்பு கொடுத்து வந்தது. இதனை தொடர்ந்து அவரது உடல் நிலை சிறிது சிறிதாக தேறிவந்தது. கடந்த இரண்டு நாட்களாக அவர் நன்றாக ஓய்வெடுப்பதாகவும், உடல்நிலை தேறியிருப்பதாகவும் வாடிகன் தெரிவித்தது. எனினும் போப் ஆபத்தான கட்டத்தை இன்னும் கடக்கவில்லை என்றே மருத்துவர்கள் குழு கூறிவந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் போப் உடல்நிலை திடீரென மோசமடைந்தது.

அவருக்கு வாந்தி, இருமல் ஏற்பட்டதோடு மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு செயற்கை சுவாச கருவியை பொருத்தி சிகிச்சை அளித்தனர். அவரது ஒட்டுமொத்த மருத்துவ நிலையை மதிப்பிடுவதற்கு 24 முதல் 48 மணி நேரம் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வாடிகன் நேற்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் இரவு நேரத்தை அமைதியாக கடந்துவிட்டார். சுவாச பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை. காலையில் காபி குடித்தார். செய்தித்தாள் வாசித்தார். ஓய்வெடுக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

The post ரோம் மருத்துவமனையில் வாந்தி, இருமலால் போப் பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article