
புதுடெல்லி,
இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை என பிசிசிஐ விளக்கமளித்துள்ளது .
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் 'ஏ' பிளஸ் பிரிவிலேயே தொடருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள் என்பதால் அவர்கள் இன்னும் இந்திய அணியின் ஓர் அங்கம்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஏ' பிளஸ் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது.