ஓ.டி.டி.யில் வெளியாகும் 'கேங்கர்ஸ்' திரைப்படம்

4 hours ago 3

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்களில் ஒருவர் வடிவேலு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கேங்கர்ஸ். இப்படத்தை இயக்குநர் சுந்தர் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தினை அவ்னி சினிமாக்ஸ் நிறுவனம் தயாரிக்க சத்யா.சி இதற்கு இசையமைத்திருந்தார்.

இதில் கேத்ரின் தெரசா, வாணி போஜன், ஹரிஷ் பெரடி, மைம் கோபி, முனிஸ்காந்த், பக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் 300-க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிடிவான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. அதன்படி, கேங்கர்ஸ் திரைப்படம் நாளை (15-ந் தேதி) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Beat the summer heat with the ultimate #Gangers laugh riot ❤️ All from the comfort of your home #GangersOnPrime — Streaming tomorrow ▶️ on @PrimeVideoIN#SundarC #Vadivelu @khushsundar #AnanditaSundar @benzzmedia #CatherineTresa @vanibhojanoffl @CSathyaOfficial pic.twitter.com/JMCB5whJRs

— Avni Cinemax (@AvniCinemax_) May 14, 2025
Read Entire Article