
அசாமின் திப்ருகார் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி இடையே விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஈரோடு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் இன்று அசாமில் கன்னியாகுமரி சென்ற விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு ஜங்ஷன் வந்த போது அதில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் ரெயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கழிவறை அருகே சில பைகளில் 14 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.