ரொனால்டோ சாதனையை சமன் செய்த மெஸ்ஸி

3 months ago 21

பியூனஸ் அயர்ஸ்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. 48 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும்.தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடக்கின்றன. இதில் தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா - பொலிவியா அணிகள் மோதின.பரபரப்பான இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது . இதனால் ஆட்ட நேர முடிவில் 6-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது . அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அல்வாரஸ் , மார்டினஸ் , தியாகோ ஆகியோரும் கோல் அடித்தனர் .

சர்வதேச போட்டியில் மெஸ்ஸி 'ஹாட்ரிக்' கோல் அடிப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் சர்வதேச கால்பந்தில் அதிக முறை (10 தடவை) 'ஹாட்ரிக்' கோல் அடித்திருந்த போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை மெஸ்ஸி சமன் செய்தார். அத்துடன் உலகக் கோப்பைக்கான தென்அமெரிக்க தகுதி சுற்றில் 3 முறை 'ஹாட்ரிக்' கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் மெஸ்ஸி தனதாக்கினார். மேலும் 189-வது சர்வதேச போட்டியில் ஆடிய 37 வயது மெஸ்ஸியின் கோல் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது.

Read Entire Article