ரேஸுக்கு தீவிரமாக தயாராகும் அஜித்.. வைரலாகும் புகைப்படம்

3 months ago 15

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் அஜித் குமார். மகிழ் திருமேனி இயக்கத்தில் இவரது நடிப்பில் கடந்த 6-ந் தேதி 'விடாமுயற்சி' படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படமான 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் (Dubai 24H Race) பங்கேற்றார். அதில் அஜித்தின் அணி 992 பிரிவில் 3வது இடத்தை பிடித்து அசத்தியது. அதனை தொடர்ந்து போர்ச்சுகலில் நடைபெற உள்ள கார் ரேஸில் அஜித் கலந்துகொள்ள உள்ளார். இதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அதாவது, கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக அஜித் உடல் எடையை குறைத்து வருகிறார். அதற்காக தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அஜித் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறார். 

Read Entire Article