ரேஷன் கடைகளுக்கு தரமில்லாத பொருட்களை கொள்முதல் செய்யக்கூடாது: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

4 hours ago 3

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிற மாநிலங்களில் உள்ள நிறுவனங்களிடமிருந்து தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்து அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வியோகித்து மக்களின் பணத்தை வீணடித்ததே ஊழலுக்கு சிறந்த உதாரணம். அந்த வரிசையில், தரமற்ற நிறுவனங்களிடமிருந்து ரேஷன் கடைகளுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவற்றை கொள்முதல் செய்ய தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

தர பரிசோதனையில் தேர்வாகாத நிறுவனங்களிடமிருந்து பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றை மக்களுக்கு வினியோகித்தால் அவை மக்களுக்கு கேடு விளைவிக்கும் என்பதைக் கூட பொருட்படுத்தாமல், அந்த நிறுவனங்களிடமிருந்து பொருட்களை கொள்முதல் செய்வது என்பது ஊழலின் உச்சகட்டம். ஆதாயம் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது கடும் கண்டனத்திற்குரியது.

முதல்-அமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி, தரமில்லாத பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும், மக்களுக்கு தரமான பொருட்களை விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Read Entire Article