ரேஷன் கடை கட்டுநர் பணிக்கு 28ம் தேதி முதல் நேர்முக தேர்வு: ஆன்லைனில் ஹால் டிக்கெட் பெறலாம்

2 months ago 10

வேலூர், நவ.17: வேலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் (ஆன்லைன்) மூலமாக பெறப்பட்டுள்ளன. இதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 28ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள வெங்கவேடஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரில் நடைபெறுகிறது.

எனவே, நேர்முகத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வேலூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் www.drbvellore.net என்ற இணையதளத்தில் நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேவேளையில். நேர்முகத்தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி, முன்னுரிமை தகுதி மற்றும் இதர தகுதிகளுக்கான சான்றிதழ்கள் (அசல் மற்றும் சுய ஒப்பமிட்ட இரு நகல்கள்). இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்து.

The post ரேஷன் கடை கட்டுநர் பணிக்கு 28ம் தேதி முதல் நேர்முக தேர்வு: ஆன்லைனில் ஹால் டிக்கெட் பெறலாம் appeared first on Dinakaran.

Read Entire Article