தொண்டி, அக்.25: தொண்டி அருகே நம்புதாளை ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இப்பகுதிக்கென துணை சுகாதார நிலையம் துவங்கப்பட்டது. இந்த கட்டிடம் எவ்வித பராமறிப்பும் இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனால் ஆபத்தை தவிர்க்கும் பொருட்டு அருகில் உள்ள சமுதாய கூடத்தில் இந்த துணை சுகாதார நிலையத்தை மாற்றியுள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போதிய இடவசதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு இது கடும் சிரமத்தை ஏற்படுத்துவதால், உடனடியாக புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ரேஷன் கடை கட்ட வலியுறுத்தல் appeared first on Dinakaran.