ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளுக்கு நீர் பாய்ச்சும் பணி

2 hours ago 1

ஊட்டி: உறைப்பனியில் இருந்து மலர் செடிகளை பாதுகாக்க ஊட்டி தாவரவியல் பூங்காவில் செடிகளுக்கு பூங்கா ஊழியர்கள் தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி தாக்கம் இருக்கும். இந்த சமயத்தில் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவும். மேலும் செடிகள், புல் வெளிகளில், தேயிலை தோட்டங்களில் உறைப்பனி கொட்டும். புல்வெளிகளில் கொட்டும் பனியை பார்ப்பதற்கு வெள்ளை கம்பளம் விரித்தது போல் காணப்படும். இந்த ஆண்டு துவக்கத்தில் (ஜனவரியில்) இருந்து உறைப்பனி பொழிவு இருந்து வருகிறது. இதனால், அதிகாலை நேரங்களில் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது வழக்கத்தை விட உறைப்பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறி செடிகளும் கருக துவங்கியுள்ளன.

மேலும் மாவட்டத்தில் உள்ள பூங்கா மைதானம், குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட இடங்களில் உறைப்பனி கொட்டி வருகின்றன. இதில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானத்தில் பனி கொட்டி கிடப்பதால், புல்வெளிகள் கரும் நிலை இருந்தது. இதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் புல் மைதானங்களில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இதில் அலங்கார செடிகளுக்கு குழாய்கள் மூலம் ஊழியர்கள் தண்ணீர் பாய்ச்சி பாதுகாத்து வருகின்றனர். மேலும் பூங்காவில் உள்ள அலங்கார செடிகள் போன்றவைகளை பாதுகாக்கும் பொருட்டு தாகை செடிகள் கொண்டு பாதுகாப்பு செய்யப்பட்டு வருகின்றன.

The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளுக்கு நீர் பாய்ச்சும் பணி appeared first on Dinakaran.

Read Entire Article