சிவகங்கை, மார்ச் 10: சிவகங்கை மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா(ஏஏஒய்) மற்றும் முன்னுரிமை (பிஹெச்ஹெச்) ரேசன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மார்ச் 15ம் தேதிக்குள் விரல் ரேகை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில், 46,339அந்தியோதயா அன்ன யோஜனா ரேசன் கார்டுதாரர்கள் உள்ளனர். இந்த ரேசன் அட்டைதாரரர்களின் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 1,65,432 ஆகும். அதில், 1,21,924 நபர்களின் விரல் ரேகை விபரங்கள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதுபோல் 1,91,710 முன்னுரிமையுள்ள ரேசன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 6,14,816 ஆகும். அதில், 4,46,199 நபர்களின் விரல்ரேகை விபரங்கள் மட்டுமே, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ரேசன் கார்டுகளில் உள்ள 7,80,248 குடும்ப உறுப்பினர்களில் 2,12,125 பேர் விரல்ரேகை பதிவு செய்யவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும், ரேசன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள நியாய விலைக்கடைகளில் மார்ச் 15ம் தேதிக்குள் விரல்ரேகை பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post ரேசன் அட்டைதாரர்கள் மார்ச் 15க்குள் விரல் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல் appeared first on Dinakaran.