ரெய்டு 2 படம் : தமன்னா நடனமாடியுள்ள பாடலின் அறிவிப்பு

1 week ago 4

மும்பை,

அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ரெய்டு. இதில் தேவ்கன் ஐஆர்எஸ் அதிகாரி அமய் பட்நாயக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ரெய்டு படத்தின் தொடர்ச்சியாக ரெய்டு 2 உருவாகியுள்ளது. இதில், அஜய் தேவ்கன், வாணி கபூர் மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு ஒன்றிற்கு நடிகை தமன்னா நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியானது.

முன்னதாக, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் ' படத்தில் இடம்பெற்ற 'காவாலா' பாடலுக்கும், பாலிவுட்டில் ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான 'ஸ்ட்ரீ 2' படத்தில் 'ஆஜ் கி ராத்' பாடலுக்கும் தமன்னா நடனமாடியிருந்தார். அதனை தொடர்ந்து ரெய்டு 2 படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். இந்த நிலையில் தமன்னா நடனமாடியுள்ள 'நாஷா' என்ற பாடல் நாளை வெளியாக உள்ளது. இது குறித்த பதிவை தமன்னா வெளியிட்டுள்ளார். 

Sabke dil aur dimaag pe chadhega #Nasha!Song Out Tomorrow. #Raid2 knocking in cinemas on 1st May.@ajaydevgn @Riteishd @Vaaniofficial #RajatKapoor #SaurabhShukla #SupriyaPathak @amit_sial @rajkumar_rkg #BhushanKumar #KrishanKumar @KumarMangat @AbhishekPathakkpic.twitter.com/kEnrvvNDIb

— Tamannaah Bhatia (@tamannaahspeaks) April 10, 2025
Read Entire Article