
ரெயில்வே கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றாக ரைட்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. ஜெனரல் மேனேஜர் மற்றும் உதவி மேனேஜர் ஆகிய பதவிகளுக்கான 18 காலிப்பணியிடங்கள் வழக்கமான முறையிலும், தென் மண்டலத்திற்கான தள மதிப்பீட்டாளர் பதவியில் உள்ள 6 காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையிலும் நிரப்பப்பட உள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம் :
டிஜிஎம்- ௦4
உதவி மேலாளர்: 14
தென் மண்டலம்- தள மதிப்பீட்டளர்: 06, என மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு : 27.07.2025 தேதியின்படி, 41 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி : டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் மற்றும் உதவி மேனேஜர் பதவிக்கு அந்தந்த பிரிவுகளுக்கு ஏற்ப பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அனுபவமும் கோரப்பட்டுள்ளது.
தள மதிப்பீட்டாளர் பதவிக்கு 10-ம் வகுப்பிற்கு பின்பு எலெக்ட்ரிக்கல் சார்ந்த ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 1 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம் : ரெயில்வே கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.rites.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.300 செலுத்த வேண்டும். தள மதிப்பீட்டாளர் பதவிக்கு ரூ.300 செலுத்த வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க : https://www.rites.com/Career