ரெயில்வே இரும்பு தடுப்பில் சிக்கிய காட்டுயானை பத்திரமாக மீட்பு

3 hours ago 2

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா வால்னூர் தியாகத்தூர் கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால், காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து விடுகின்றன. அவ்வாறு வரும் வனவிலங்குகள் கிராமத்தில் உள்ள கால்நடைகளை தாக்கிவிட்டும், விவசாய நிலங்களை நாசப்படுத்தியும் விடுகின்றன.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று வால்னூர் தியாகத்தூர் கிராமம் அருகே உள்ள காபி தோட்டத்தை நோக்கி சென்றது. அப்போது ரெயில் தண்டவாளம் அருகே இருந்த இரும்பு கம்பியை கடக்க முயன்றபோது காட்டுயானை சிக்கி கொண்டது. அதாவது, காட்டுயானை இரும்பு கம்பியின் கீழே நுழைந்து சென்று கடக்க முயன்றபோது சிக்கி கொண்டுள்ளது.

இதனால் காட்டுயானையால் இரும்பு கம்பியை விட்டு வெளியே வரமுடியவில்லை. பின்னர் காட்டுயானை இரவு முழுவதும் அங்கேயே பிளிறியபடி கிடந்துள்ளது. இதையடுத்து மறுநாள் காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இரும்பு தடுப்பில் சிக்கிய காட்டுயானையை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

Read Entire Article