'ரெயில் பயணம் சார்ந்த பதற்றத்தில் இருந்து விடுபடுவதற்குள் அடுத்த விபத்து நடக்கிறது' - சு.வெங்கடேசன்

3 months ago 23

விருதுநகர்,

ரெயில்வே துறையில் சில அடிப்படை மாறுதல்கள் தேவை என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"கடந்த காலங்களை விட தற்போது அதிகமான ரெயில் விபத்துகள் நடக்கின்றன. பயணிகளின் பாதுகாப்புக்காக கவாச் இயந்திரம் பொருத்துவதில் மத்திய அரசு அக்கறை இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ரெயில் பயணம் சார்ந்த பதற்றத்தில் இருந்து மக்கள் விடுபடுவதற்குள் அடுத்த விபத்து நடக்கிறது. ரெயில்வே துறையில் சில அடிப்படை மாறுதல்கள் தேவை. அதற்கு ரெயில்வே துறை முன்னுரிமை தர வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read Entire Article