
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யவும், அவர்களுடைய வசதிகளை மேம்படுத்தவும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 18 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதன்படி, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-16752) நாளை முதலும், எழும்பூர்-ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் ரெயிலில் (16751) வருகிற 19-ந்தேதி முதலும், கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது.
அதேபோல, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22662) எழும்பூர்-ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் ரெயிலில் (22661) வருகிற 20-ந்தேதி முதலும் கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு செல்லும் ரெயிலில் (56738) 25-ந்தேதி முதலும், நெல்லை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் ரெயிலில் 26-ந்தேதி முதலும் கூடுதலாக இரண்டு 2-ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.
இதேபோல, நாகர்கோவில்-கோட்டயம், தஞ்சாவூர்-திருச்சி, திருச்சி-மயிலாடுதுறை உள்பட மொத்தம் 18 ரெயில்களில் கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.