"ரெட்ரோ" படத்தின் 2வது பாடலுக்கான புரொமோ வெளியீடு

15 hours ago 1

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. முன்னதாக டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் காமிக்ஸ் வடிவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடல் நாளை வெளியாக உள்ளது.

இந்நிலையில் 'ரெட்ரோ' படத்தின் 'கனிமா' பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கனிமா  பாடலின் புரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Get, Set, Kuthu #Kanimaa from #Retro ❤️A @Music_Santhosh Releasing tomorrow, at 5PM.#RetroFromMay1 #LoveLaughterWar pic.twitter.com/PutnN6jCEg

— karthik subbaraj (@karthiksubbaraj) March 20, 2025
Read Entire Article