நான் கிரிக்கெட் விளையாட அவர்தான் காரணம் - சுப்மன் கில்

1 week ago 2

மும்பை,

இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திர வீரரான சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணியின் அடுத்த கேப்டனாகவும் கருதப்படுகிறார். ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக உள்ள சுப்மன் கில், எதிர்வரும் சீசனில் அந்த அணிக்கு கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறார்.

இந்நிலையில் தாம் கிரிக்கெட் விளையாட சச்சின்தான் காரணம் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார். அத்துடன் தம்முடைய சிறுவயதில் சச்சினுக்கு எதிராக வலைபயிற்சியில் பந்துவீசி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பஞ்ச்குலாவில் உள்ள டவ் தேவி லால் மைதானத்தில் என் தந்தையுடன் 3-4 போட்டிகளில் விளையாடியது நினைவில் இருக்கிறது. ஐ.பி.எல்.-ன் 3-வது அல்லது 4-வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் பயிற்சிக்காக அங்கு வந்தது. அப்போது எனக்கு 9-10 வயது இருக்கும். சச்சின் சார் மற்றும் கிளென் மேக்ஸ்வெல்லுடன் நான் எடுத்து கொண்ட ஒரு புகைப்படம் கூட என்னிடம் உள்ளது. பயிற்சியின்போது நான் அவர்களுக்கு எதிராக பந்துகளை வீசினேன்.

ஐ.பி.எல். பற்றிய எனது ஆரம்பகால நினைவுகள் இவை. அப்போது நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். ஆனால் எனக்கு ஏற்கனவே சச்சின் சார் பற்றி தெரியும். நான் கிரிக்கெட் விளையாட தொடங்குவதற்கு அவர்தான் காரணம். என் தந்தை அவரது மிகப்பெரிய ரசிகர். என் தந்தைக்கு போஸ்டர்களில் அதிக ஆர்வம் இல்லை என்றாலும், எங்கள் கிராமத்தில் சச்சினுக்காக போஸ்டர்கள் வைத்தார் " என்று கூறினார்.

Read Entire Article