`ரெட்ட தல' அப்டேட் கொடுத்த அருண் விஜய்

7 hours ago 1

சென்னை,

1995-ல் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். கடைசியாக இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையில் வெளியான 'வணங்கான்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து இவர், கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் 'ரெட்ட தல' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஒரு பாடலை தனுஷ் பாடி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலுக்கு மத்தியில், இப்படத்தின் அப்டேட் ஒன்றை அருண் விஜய் பகிர்ந்துள்ளார். அதன்படி, அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'பெரிய ஆச்சரியமான விஷயம் படத்தில் உள்ளது' என்று தெரிவித்திருக்கிறார்.

A surprise and something big for #RettaThala!! ❤️ pic.twitter.com/Y4cLK5Nvqd

— ArunVijay (@arunvijayno1) April 7, 2025
Read Entire Article