சென்னை : சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நெல்லையில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை சென்னை விரைகிறது. சென்னையில் ஏற்கனவே 3 குழுக்கள் உள்ள நிலையில் மேலும் 6 குழுக்கள் சென்னை விரைகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 குழுக்கள் சென்னை விரைகின்றன. திருச்சியில் 3 குழுக்கள், கோவையில் 3 குழுக்கள், மேட்டுபாளையத்தில் 3 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து திருச்சியில் 3 குழுக்கள், கோவையில் 3 குழுக்கள், மேட்டுபாளையத்தில் 3 குழுக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
ஒரு குழுவிற்கு 25 வீரர்கள் விதம் 450 வீரர்கள் அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும், சென்னை மாநகரில் பருவமழையை எதிர்கொள்ள சென்னை போலீசாரும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். தண்ணீர் அதிகமாக தேங்கும் இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இது தவிர ஆயுதப்படையில் உள்ள பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 300-க்கும் மேற்பட்ட காவலர்களும் தயார் நிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரை போன்றே சிறப்பு பயிற்சி பெற்ற இவர்கள் 12 துணை கமிஷனர் அலுவலகங்கள் நான்கு இணை கமிஷனர் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு தனித்தனியே பிரித்தும் கொடுக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் போலீஸ் நிலையங்கள் வாரியாக தனியாக கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டு உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் கனமழையை எதிர்கொள்ள 160 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. மழைநீரை வெளியேற்ற 900 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன; மரக்கிளைகளை அகற்ற 280 மரம் அறுக்கும் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன; சிந்தாதிரிப்பேட்டை, கோபாலபுரத்தில் மணிக்கு 1,500 பேருக்கு உணவுப் பொட்டலம் தயாரிக்க சமையற் கூடங்கள் தயார்; 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து கண்காணிப்பு எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post ரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி…! நெல்லையில் இருந்து சென்னை விரைகிறது தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.