தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 100 கிராம்
மைசூர் பருப்பு – 50 கிராம்
பச்சரிசி – 50 கிராம்
காய்ந்த மிளகாய் – 10
தனியா – 50 கிராம்
வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
தேங்காய்த் துருவல் (காய்ந்தது) –
புளி – எலுமிச்சை அளவு.
செய்முறை
அனைத்துப் பொருட்களையும் எண்ணெய் இல்லாமல் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். சல்லடையில் சலித்து ஈரமில்லாத டப்பாவில் மூடி வைத்து தேவைப்படும் போது உபயோகிக்கலாம். 3 மாதம் வரை கெடாமல் இருக்கும்.ரெடிமேட் சாம்பார் பொடியை உபயோகித்து சாம்பார் வைக்கும் முறை மேலே சொன்ன சாம்பார் பொடி 2 டேபிள் ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கரைத்து வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளித்து சாம்பாருக்கு விரும்பும் காய்கறிகளுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். கரைத்து வைத்த ரெடிமேட் சாம்பார் பொடியை ஊற்றவும். தேவைப்பட்டால் காரத்திற்கு மிளகாய் தூள் சேர்க்கவும். காய் நன்கு வெந்து கொதித்ததும் இறக்கி வைத்து மல்லி இலை தூவவும். சுவையான ரெடிமேட் சாம்பார் தயார்.
The post ரெடிமேட் சாம்பார் பொடி appeared first on Dinakaran.