ரூ.7132 கோடி மதிப்புள்ள 7400 ஏக்கர் ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

4 weeks ago 4

சென்னை: இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தற்போதுவரை 2,392 திருக்கோவில்களில் திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ.7132 கோடி மதிப்புள்ள 7,400 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, 12,202 திருக்கோவில்களில் ரூ.5,515 கோடி செலவில் 23,234 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திருத்தலங்களின் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக, ரூ.1,770 கோடி செலவில் 19 கோவில் வளாகங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல்வரின் வழிக்காட்டுதல்களால் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் உள்ளம் அறிந்து செயல்படும் முதல்வரின் நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியோடு திருக்கோவில்களில் வழிபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ரூ.7132 கோடி மதிப்புள்ள 7400 ஏக்கர் ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article