ரூ.6000 கோடி மோசடி வழக்கு மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர் துபாயில் கைது: இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை

1 month ago 5

புதுடெல்லி: மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளர் சவுரப் சந்திரகர் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் தனது திருமணத்தைரூ.200 கோடி செலவில் நடத்தினார். மகாதேவ் சூதாட்ட செயலி மூலமாக கிடைத்த பணத்தை ஹவாலா முறையில் திருமணத்துக்கு செலவு செய்தததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சவுரப் சந்திரகர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் ரூ.6000கோடி மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் துபாயில் சவுரப் சந்திரகர் கைது செய்யப்பட்டார். அவருடன் மற்றொரு உரிமையாளரான ரவி உப்பாலும் கைதாகி உள்ளார். சவுரப் சந்திரகரை விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ரூ.6000 கோடி மோசடி வழக்கு மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர் துபாயில் கைது: இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article