ரூ.527 கோடி செலவில் 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

3 hours ago 2

சென்னை,

சென்னை ராணி மேரி கல்லூரி:-

சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை சார்பில், ராணி மேரி கல்லூரியில் 42 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டிடம் உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகக் கட்டிடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டிடங்கள் போன்ற பல்வேறு கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, 207 கோடியே 82 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி:-

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை வெளிவட்ட சாலையில் உள்ள மீஞ்சூர், வெள்ளனுர், வரதராஜபுரம், திருநாகேஸ்வரத்தில் 11.46 கோடி ரூபாய் செலவில் 4 உடற்பயிற்சி பூங்காக்கள் மற்றும் 3.20 கோடி ரூபாய் செலவில் தியாகராய நகரில் சோமசுந்தரம் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து, ரூ.255.60 கோடி மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்பு:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 527 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 207 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 வணிக வளாகங்களையும் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Read Entire Article