ரூ.50 கோடிக்கு நாய் வாங்கிய நபர்.. பிரபலமாவதற்காக பொய் வீடியோ எடுத்தது அம்பலம்

22 hours ago 1

பெங்களூரு,

பெங்களூருவைச் சேர்ந்த 51 வயதான சதீஷ் என்பவர் உலகின் இந்தவகை நாய் இது ஒன்றே ஒன்றுதான். அதை நான் ரூ.50 கோடிக்கு வாங்கிவிட்டேன் என்று சதீஷ் பதிவிட்ட வீடியோ வைரலானது. பலரும் அந்த வீடியோவை ஆச்சரியமாகப் பார்த்தனர். அதனால் அந்த வீடியோ வைரலானதுடன் பேசுபொருளாகவும் மாறியது.

இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சதீஷின் வீட்டில் ஆய்வு அமலாக்கத்துறை அதிகாரிகள், சதீஷ் ரூ.50 கோடிக்கு நாய் வாங்கியது குறித்த ஆவணங்களைத் தேடினர்.

ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அந்த நாயை காட்டச் சொல்லி கேட்டதற்கு, சதீஷ் மழுப்பியுள்ளார். தன்னை ஒரு பிரபலமான நாய் வளர்ப்பாளராக காட்டிக்கொள்வதற்காக, ஊடக நண்பர் ஒருவரின் உதவியுடன் சதீஷ் மோசடி வேலையில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது.

எனினும் அமலாக்கத்துறை அவரது வருவாய் மற்றும் செலவு விவரங்களை ஆய்வு நடத்தினர். அதில், அந்த நாய், 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவானது என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, '50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கியதாக கூறியது பொய்' என்று கூறியுள்ளார். மேலும், 'இந்த நாய் தன்னுடையது அல்ல.. பக்கத்து வீட்டைச் சேர்ந்தது. இது வெளிநாட்டு நாயல்ல.. இந்திய நாய் தான். இதன் விலை 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவானது' என்றும் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் பொய் தகவல் கொடுத்த அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்

Read Entire Article