ரூ.41 கோடியில் காவல்துறைக்கு புதிய கட்டிடங்கள்: காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

2 days ago 4

சென்னை: காவல் துறை சார்பில், ரூ.41.32 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.60.54 கோடியில் 910 வாகனங்களின் சேவையைத் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை காவல்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.491.43 கோடி செலவில் 2,955 காவலர் குடியிருப்புகள், ரூ.58.01 கோடி செலவில் 49 காவல் நிலையக் கட்டிடங்கள், ரூ.122.40 கோடி செலவில் 18 காவல்துறை இதரக் கட்டிடங்கள் மற்றும் ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி மதிப்பிலான 253 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன.

Read Entire Article