மதுரையில் ஆட்சியர் இல்லம் முன்பு 2-வது நாளாக மகனுடன் போலீஸ்காரர் மனைவி தர்ணா

4 hours ago 3

மதுரை: மதுரை ஆட்சியர் இல்லத்தின் முன்பு 2-வது நாளாக போலீஸ்காரரின் மனைவி தனது மகனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மதுரை ஆயுதப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மனைவி பாபினா. இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். ஆயுதப்படை காவல் பிரிவில் பணிபுரிந்த மகாராஜன் சமீபத்தில் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். ஏற்கெனவே கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் தனித்தனியே வசிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகாராஜன் நாகமலை புதுக்கோட்டைக்கு பணி மாறியதால் ஆயுதப்படை குடியிருப்பை காலி செய்ய காவல்துறை நிர்வாகம் கூறி இருக்கிறது.

Read Entire Article