ரூ.4.51 கோடிக்கு மஞ்சள் ஏலம்

5 hours ago 4

 

நரசிங்கபுரம், மே 4: ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்தில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 892 விவசாயிகள், 5612 மூட்டை மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். ஆத்தூர், தலைவாசல், மஞ்சினி, கெங்கவல்லி சுற்று வட்டார பகுதியில் இருந்து 18 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

இதில் விரலி மஞ்சள் ரூ.13089 முதல் ரூ.16664 வரையும், உருண்டை மஞ்சள் ரூ.11589 முதல் ரூ.14029 வரையும், பனங்காளி மஞ்சள் ரூ.26969 முதல் ரூ.29369 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.4 கோடியே 51 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ரூ.4.51 கோடிக்கு மஞ்சள் ஏலம் appeared first on Dinakaran.

Read Entire Article