ரூ.350 கோடி கிரிப்டோகரன்சி மோசடி: 7 இடங்களில் சிபிஐ சோதனை

5 hours ago 1

புதுடெல்லி: கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.350 கோடி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இது தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லி, ஹசாரிபர்க், பதிண்டா, ரத்லம், வல்சாத், புதுக்கோட்டை மற்றும் சித்தோர்கர் ஆகிய நகரங்களில் கிரிப்டோகரன்சிகளில் மூதலீடு செய்வதாக உறுதியளித்து ஏமாற்றியுள்ளனர்.

இதனை தொடர்ந்து இவர்களுக்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் கிரிப்டோகரன்சி கணக்கில் இருந்து மொத்தம் 38,414 டாலர்கள் மதிப்புள்ள டிஜிட்டல் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 7 செல்போன்கள், லேப்டாப், டேப்லெட், மூன்று ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ரூ.34 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post ரூ.350 கோடி கிரிப்டோகரன்சி மோசடி: 7 இடங்களில் சிபிஐ சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article