ரூ.274 கோடியில் ஒன்றரை ஆண்டாக நடந்துவந்த எழும்பூர் - கடற்கரை 4-வது பாதை பணி நிறைவு: விரைவில் சோதனை ஓட்டம்

6 hours ago 2

சென்னை: சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது பாதை அமைக்கும் பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே தற்போது இரண்டு பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை இருக்கிறது. இதை கருத்தில்கொண்டு, எழும்பூர் - கடற்கரை வரை 4-வது பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

Read Entire Article