ரூ.25 ஆயிரம் லஞ்சம் கல்வி அதிகாரி கைது

6 months ago 29

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் அமைந்துள்ளது மாவட்ட கல்வி அலுவலகம். இங்கு மாவட்ட கல்வி தனியார் பள்ளி கண்காணிப்பாளராக கணேசன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கட்டாய கல்வி உரிமை சட்டம் மூலமாக தனியார் பள்ளிக்கு அரசு நிதி அனுப்புவது தொடர்பாக ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து பள்ளியின் நிர்வாகி லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கண்காணிப்பாளர் கணேசனிடம் பள்ளி நிர்வாகி வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

The post ரூ.25 ஆயிரம் லஞ்சம் கல்வி அதிகாரி கைது appeared first on Dinakaran.

Read Entire Article