புதுக்கோட்டை: புதுகை அருகே இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 750 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 300 வீரர்கள் காளைகளை போட்டி போட்டு அடக்கினர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெம்மக்கோட்டையில் சித்தி விநாயகர் கோயில் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை, மதுரை, சிவகங்கை, கரூர் மாவட்டங்களில் இருந்து 750 காளைகள் அழைத்து வரப்பட்டன. 300 வீரர்கள் களமிறங்கினர். போட்டி காலை 9 மணிக்கு துவங்கியது.
அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆர்டிஓ ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்தன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சேர், சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
The post புதுகை அருகே ஜல்லிக்கட்டு:300 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.