ரூ.23 லட்சம் புதிய திட்டப்பணிகள் பூமிநாதன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

1 week ago 3

 

மதுரை, ஏப். 11: ரூ.23 லட்சத்தில் புதிய நியாய விலைக்கடை மற்றும் சிறு பாலம் அமைத்தல் உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை பூமிநாதன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 49வது வார்டு நெல்பேட்டை மற்றும் 53வது வார்டு எப்எப் ரோடு பகுதியில் தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு நியாய விலைக்கடைகள் மற்றும் சிறு பாலம் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதற்கு தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா, மாமன்ற உறுப்பினர்கள் அருண்குமார், சையது அபுதாகிர், செந்தாமரைக்கண்ணன், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், மதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, பகுதி செயலாளர் கோவிந்தன், போஸ், வட்ட செயலாளர்கள் கார்த்தி, பிஸ்மி மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ரூ.23 லட்சம் புதிய திட்டப்பணிகள் பூமிநாதன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article