ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஆலவயல்-கொப்பனாபட்டி சாலை அகலப்படுத்தும் பணி துவங்கியது

2 months ago 10

 

பொன்னமராவதி, பிப்.18: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே ஆலவயல்-கொப்பனாபட்டி சாலை ரூ.2 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில் இருந்து ஆலவயல்,அம்மன்குறிச்சி,நகரப்பட்டி வழியாக திருச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை சாலை செல்கின்றது. இந்த சாலையில் ஆலவயலில் இருந்து கொப்பனாபட்டி வரை செல்லும் சாலை ரூ.சுமார் 2கோடி மதிப்பில் 3.2 கிமீ தூரம் 2 மீட்டர் அகலப்படுத்தப்பட உள்ளது. இதற்காக இந்த சாலை ஓரம் நின்ற மரங்கள் தமிழக நெடுஞ்சாலைத்துறை மூலம் வனத்துறையினரின் மதிப்பீட்டின்படி பொது ஏலம் விடப்பட்டு மரங்கள் அப்புறப்படுத்தும் பணி நடக்கின்றது.

இதே போல இந்த சாலை விரிவாக்கப்பணிக்கு முன் பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இதற்கான பணி தொடங்கியுள்ளனர். இந்த பாலங்கள் அருகில் தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதிக அளவு போக்குவரத்து வாகனங்கள் சென்று வரும் இந்த சாலை தற்போது 5 அரை மீட்டர் அகலம் உள்ளது. இந்த சாலை அகலப்படுத்தப்பட்ட பின் 7அரை மீட்டர் சாலையாக தரம் உயரும். இதனால் போக்குவரத்து வாகனங்கள் செல்ல ஏதுவாக இருக்கும் ஆலவயல-கொப்பனாபட்டி சாலையினை அகலப்படுத்தும் பணி நடப்பதால் தமிழக அரசுக்கு இப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

The post ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஆலவயல்-கொப்பனாபட்டி சாலை அகலப்படுத்தும் பணி துவங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article