அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் புதுப்பித்த ரயில்வே ஸ்டேஷன்கள் வரும் 22ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

2 hours ago 2

டெல்லி: அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில்வே ஸ்டேஷன்களை, பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, வரும் 22ம் தேதி திறந்து வைக்கிறார். ரயில்வேயில், ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, 22ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.

தெற்கு ரயில்வேயில், சென்னை பரங்கி மலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி, ஆந்திர மாநிலம் சூலுார்பேட்டை உட்பட 12க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள ரயில் நிலையங்களில், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடை, பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், ‘சிசிடிவி’ கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன’ என்றனர்

The post அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் புதுப்பித்த ரயில்வே ஸ்டேஷன்கள் வரும் 22ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Read Entire Article