ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250 ஆர்: ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 250 ஆர் மோட்டார் சைக்கிளில், 249 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 30 எச்பி பவரையும் 25 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது இந்த நிறுவனத்தின் அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளாக கருதப்படுகிறது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.1.8 லட்சம்.
கேடிஎம் 250 டியூக்: இந்த மோட்டார் சைக்கிளில் 249 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 9,250 ஆர்பிஎம்-ல் 31 எச்பி பவரையம், 7,250 ஆர்பிஎம்-ல் 25 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஹீரோ எக்ஸ்ட்ரீமை விட ஒரு எச்பி திறன் அதிகம். அலுமினியம் ஸ்விங் ஆர்ம்கள், குவிக் ஷிப்டர், டிஎப்டி டிஸ்பிளே ஆகியவை இடம் பெற்றுள்ளன.ஷோரூம் விலை சுமார் ரூ.2.3 லட்சம்.
டிரையம்ப் ஸ்பீடு: டிரையம்ப் ஸ்பீடு டி4 மோட்டார் சைக்கிளில், மேற்கண்ட இரண்டு பைக்குகளையும் விட அதிக திறன் கொண்ட 399 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. சிறிய திராட்டில், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட ஏர்பாக்ஸ் ஆகியவை உள்ளன. இதன் காரணமாக இன்ஜின் திறன் 400 சிசி பைக் பிரிவுகளில் குறைந்த அதாவது 31 எச்பி திறனையும் 36 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஷோரூம் விலை சுமார் ரூ.1.99 லட்சம் முதல் ரூ.2.03 லட்சம்.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310: இந்த மோட்டார் சைக்கிளில் 312 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றிருக்கும். இது அதிகபட்சமாக 9,700 ஆர்பிஎம்-ல் 35.6 எச்பி பவரையும், 6,650 ஆர்பிஎம்-ல் 28.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மூன்று வேரியண்ட்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.2.5 லட்சம்.
பஜாஜ் டோமினார் 400: இந்த மோட்டார் சைக்கிளில் கேடிஎம் 390 டியூக்கில் உள்ள இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதிலுள்ள 373 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 8,800 ஆர்பிஎம்-ல் 40 எச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 35 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஷோரூம் விலை சுமார் ரூ.2.39 லட்சம்.
பஜாஜ் பல்சார் என்எஸ் 400இசட்: இந்த மோட்டார் சைக்கிளில் 373 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்மாக 40 எச்பி பவரையும், 35 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஷோரூம் விலை சுமார் ரூ.1.85 லட்சம்.
டிரையம்ப் ஸ்பீடு 400: இந்த மோட்டார் சைக்கிளில் 398 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்மாக 8,000 ஆர்பிஎம்-ல் 40 எச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 37.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஷோரூம் விலை சுமார் ரூ.2.46 லட்சம்.
The post ரூ.2,50,000 உட்பட்ட அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் appeared first on Dinakaran.