“ரூ.1,800 கோடி செலவிட்ட பிறகு சேது சமுத்திர திட்டம் நிறுத்திவைப்பு” - சேலம் எம்.பி குற்றச்சாட்டு

2 hours ago 3

மேட்டூர்: “சேது சமுத்திர திட்டத்துக்கு ரூ.1,800 கோடி செலவு செய்த பிறகு கைவிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்” என சேலம் எம்.பி செல்வணபதி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர், கொளத்தூர், ஆர்.எஸ், வீரக்கல்புதூர் மற்றும் தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேலம் எம்.பி-யுமான டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை இன்று (மே 6) திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட எம்.பி-க்களுக்கான ஆலோசனை கூட்டம் 6 மாதத்துக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால், ஓராண்டாகிய நிலையில் தற்போதுதான் நடைபெற்றது.

Read Entire Article